Praying for others in your brokenness is a selfless act of love
கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் Church என்று அழைக்கப்படுகிறது.
தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் சிலுவை உருவில் வடிவமைக்க படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன.
சிற்றாலயம் (Chapel) : எனப்படுவது ஒரு தனிபட்ட நபரோ (அரசர்கள், ஆயர்கள்) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்) வழிபட பயன்படுத்தும் ஆலயம்.
ஆலயம் (Church) : என்னும் பொதுப்பெயரால் ஒரு பங்கிலோ கிளைப்பங்கிலோ வாழ்கின்ற கிறித்தவ மக்கள் வழிபாட்டுக்காகக் கூடிவருகின்ற தொழுகை இடம் குறிக்கப்படுகிறது.
பேராலயம் (Basilica = பசிலிக்கா) : எனப்படுவது கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது
திருத்தலம் (Shrine) : எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும்.
கதீட்ரல் (Cathedral) : கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் ஆயரின் ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும்.
To visit House of God
ஆகா.. எத்தனை அழகு... விழிகளை வியப்பிலாழ்த்தும் அந்த மலை.. அதுதான் குருசுமலை.
அந்த மலை உச்சியில் தான் குருசு நிறுவப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரம். அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வது சற்றுக் கடினமானப் பயணம் தான் . மலை உச்சிக்கு சென்றால் இதமான தென்றல் தழுவும். கூடவே ஒரு புறம் நெய்யாறு அணைக்கட்டும், மறுபுறம் சிற்றாறு அணைக்கட்டும் தெரியும்.
மலை உச்சி தமிழக எல்லையில் இருக்கிறது. அந்த உச்சிப் பகுதியில் சிலுவை தன்னந்தனியாக கைகளை விரித்தவாறு நிற்கிறது.. அது அன்பிற்காய்... ஆதரவிற்காய்.. நல் வாழ்விற்காய் ஏங்குபவர்களே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருப்பதாய் படுகிறது....