Praying for others in your brokenness is a selfless act of love
கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் Church என்று அழைக்கப்படுகிறது.
தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் சிலுவை உருவில் வடிவமைக்க படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன.
சிற்றாலயம் (Chapel) : எனப்படுவது ஒரு தனிபட்ட நபரோ (அரசர்கள், ஆயர்கள்) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்) வழிபட பயன்படுத்தும் ஆலயம்.
ஆலயம் (Church) : என்னும் பொதுப்பெயரால் ஒரு பங்கிலோ கிளைப்பங்கிலோ வாழ்கின்ற கிறித்தவ மக்கள் வழிபாட்டுக்காகக் கூடிவருகின்ற தொழுகை இடம் குறிக்கப்படுகிறது.
பேராலயம் (Basilica , பசிலிக்கா) : எனப்படுவது கிரேக்க மொழியில் அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது
திருத்தலம் (Shrine) : எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும்.
கதீட்ரல் (Cathedral) : கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் ஆயரின் ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும்.
To visit House of God
புனித சவேரியார் பேராலயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இவ் ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இவ் ஆலயத்தை பொதுமக்கள் கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று அழைக்கின்றனர். 1542ல் மறைபரப்பிற்காக இந்தியாவிற்கு வந்த சவேரியார் 1544ம் ஆண்டு பூவாரிலிருந்து பள்ளம் என்ற கடற்கரை ஓரமாக வசித்து வந்த.....