top of page

கிறிஸ்துமஸ் கேரல்ஸ்

பிரமாண்டமான கிறிஸ்துமஸ் ஸ்டார்

குமரி மாவட்ட கிறிஸ்துமஸ் குடில்கள்

1000 - கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு - கருங்கல்

கிறிஸ்துமஸ் கேக் வகைகைகள்

பாலப்பள்ளம்‬ கிறிஸ்மஸ் குடில் பகலில்

45 அடி உயர கிறிஸ்மஸ் தாத்தா- சுங்கான்கடை

குமரி  மாவட்ட  கிறிஸ்துமஸ்  கொண்டாடங்கள் 

Kumari  District  Christmas  Celebrations

கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முதன்மையானது இப்புனிதத் திருநாள். எல்லா மதத்தினராலும் சமயச் சார்பற்றுக் கொண்டாடபடும் விழா இது.

கிறிஸ்துவ மறைநூலாகிய விவிலியத்தின் படி கபிரியேல் என்ற இறைத்தூதன் கன்னிமரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசுபிரான் பிறக்கப்போவதை அறிவித்தார். பரிசுத்த ஆவியாலேயே மரியாள் கருவுற்றாள் என்று தெரிந்த  யோசேப் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

 

மரியாள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த அகஸ்துஸ் மன்னனின் கட்டளைப்படி, யோசேப்பும், மியாளும் யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு இடம் ஏதும் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அந்த மாட்டுத் தொழுவத்தில் பரவிக்கிடந்த வைக்கோல் புல்லில் மரியாள் இயேசுபிரானைப் பெற்றெடுத்தாள் . 

 

அவர் அவதரித்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையரிடையே இறைத்தூதர் தோன்றி, ஏழை எளிய மக்களை இரட்சித்துக் காக்க இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். அப்போது வானில் இருந்த நட்சத்திரத்தின் ஒளியால் வழிகண்டு பிடித்து, இடையரும், சாஸ்திர வலுனர்களும்  குழந்தை ஏசுவை வணங்கினர். இதன் குறியீட்டாகவே அனைத்துக் கிறிஸ்துவ இல்லங்களிலும் நட்சத்திர வடிவிலான மின்விளக்குகள் அலங்காரமாகத் தொங்கவிடப்படுகின்றன. 

.

குமரி  மாவட்டத்தில்  களைகட்டும்  கிறிஸ்மஸ்   கொண்டாட்டங்களின் ஒரு  பகுதி  உங்கள்  பார்வைக்கு  Slide  Show  வாக  கொடுக்கப்பட்டுள்ளது

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து வீடு வீடாக சென்று கேரல் பாடல் பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது, வீடுகளில் ஸ்டால் தொங்கவிடுவது என கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவங்குவர்.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்னும் விளக்குகள் அமைக்கப்பட்டும்.  பல வண்ண ஸ்டார்களில் மின் விளக்குகளும் அமைக்கப்படடும்.  வீடுகளில் உள்ள மரக்கிளைகளிலும்,  மலை உச்சியிலும்,  ரோடுகளிலும்  விதவிதமான ஸ்டார்கள் அமைக்கப்பட்டு, எப்போதும்  ஜொலித்து கொண்டிருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி  குமரி மாவட்ட தில்  துணி வகைகள்,  கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்,  படங்கள்  பட்டாசுகளும்  விற்பனை  ‘சூடு  பிடிக்கும். மேலும்  பட்டாசு கடைகள்  அங்காங்கே  காணப்படும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய அங்கம் வகிப்பது கேக் வகைகள். குமரி மாவட்டத்தில் உள்ள சுவீட் கடைகள், பேக்கரிகளில் பல்வேறு வடிவங்களிலான கிறிஸ்துமஸ் கேக் வகைகள் தயார் செய்து விற்பனைக்கு தயாராக இருக்கும் விதவிதமான இனிப்பு வகைகளும் கடைகளில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டும்.  இயேசு கிறிஸ்துவின் பறப்பை நினைவூட்டும் வகையில் கிறிஸ்துமஸ் மாட்டு குடில் அமைக்கும் பழக்கம் உள்ளதால், இவற்றை சித்தரிக்கும்  பொம்மைகள் அதிக  அளவில் விற்பனை ஆகும் . மேலும் வீடுகளில் குடில் அமைத்தும், தெருக்களில் குடில் அமைத்தும் வருகின்றனர். இதற்கான சுக்குநாறி புல் விற்பனை நாகர்கோவில், சுங்கான்கடை கருங்கல்  உள்ளிட்ட  மலை  குதிகளில்  இருந்து  இளைர்கள்  வெட்டி வருவார்கள் மற்றும் விற்பனையும்  செய்யப்பட்டு  வருகிறது.

 

இந்நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் சில அமைப்புகள் சார்பல் குடில் போட்டிகள் நடத்தப்படுகிறது. அமைப்புகள் சார்பல் மிகப்பெரிய குடில் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த குடில்கள் டிசம்பர்  24ம் தேதி மக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.  கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வீதிகள் தோறும் வலம் வந்து குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுவர்.  ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அன்பன் வெளிப்பாடாக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுவார்கள்.  கிறிஸ்துமஸ் வாழ்த்து வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட அட்டைகள் விற்பனையும்  அமோகமாக நடைபெறும். கிறிஸ்துமஸ் வாழ்த்து எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வாழ்த்து ஈமெயில் அனுப்புவது என கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டும்.

 

குமரிமாவட்டத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு குழுக்கள் சார்பல் மாவட்ட அளவிலான கிறிஸ்துமஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். வாலிபால், கபடி, கால்பந்து போன்ற போட்டிகள் நடக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பரார்த்தனை நடக்கிறது.  ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டடு  மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தவர் தான்  இயேசு கிறிஸ்து

 

அனைத்து நாட்டவராலும் பேதமின்றிக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாமும் கொண்டாடி அன்பினையும், மகிழ்வையும் பரிமாறி கர்த்தரின் அருள் பெருவோமாக! -  ஆமென்

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival
Festival
Festival
Festival
Festival
Festival
bottom of page