top of page

Tamiler Music & Instruments

இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் த்வனிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஓன்று. இசை இன்று பல்வேறு பயன்களை தருகின்றது.தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது

 

தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகிறது. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை)

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. வில்லுப்பாட்டு என்னும் கதைப் பாடல் வடிவமாகும் துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.

 

தமிழகத்தின் தென் பகுதியில் (குமரி, நெல்லை மாவட்டங்கள்) செல்வாக்குப் பெற்றுள்ள இக்கலையை ‘வில்லிசைப்பாடல்’ என்றும் ‘வில்லடிச்சான் பாட்டு’ என்றும்வழங்குவர். இப்பாடல் வடிவமானது கதைகூறல் முறையில் இன்றும் மக்களிடையே, குறிப்பாகத் தென் மாவட்ட மக்களிடையே, செல்வாக்குடன் விளங்கி வருகிறது. 

 

நாடகத்தன்மையுடன் கதை கூறிச் செல்லும் முறைமைக்குக் கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்று பெயர். வில்லுப்பாட்டு முழுக்க இவ்வடிவத்துக்கான கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. கதைக் கூற்றரங்கில் ஒரு கதையின் பல்வேறு பாத்திரப்படைப்புக்களின் இயல்புகளையும்     மிகச் சிறந்த முகபாவனைகளுடன் குறிப்பிட்ட குழுவினர் நடித்துக் காட்டும் பாங்கு, பார்வையாளரை மிகவும் ஈர்க்கும் வண்ணம் அமைந்து நிற்கும். (முகபாவனை = முகத்தில் அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறும் உணர்ச்சி வேறுபாடு.)

இக்கலையானது, தென் மாவட்டங்களில் அம்மன் கோவில் விழாக்களிலும், கொடை விழாக்களிலும் இப்போதும் நடத்தப் பெற்று வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம் பெறுகின்றது. இதன் தோற்றம் குறித்துப் பலவாறு செய்திகள் உள்ளன. இக்கலை பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியி்ருக்கலாம் என்பர். (தி.சி. கோமதி நாயகம், தமி்ழில் வி்ல்லுப்பாட்டுக்கள். ப. 78) ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே இது தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கி வருகிறது.

 

எக்காளம்

எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.
எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது

 

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ திருமணங்களில் பேண்ட் வாத்தியக் குழுவினர் பேண்ட் இசையுடன் தான் திருமணம் நடக்கிறது. பேண்ட் வாத்தியக் குழுவினர், சீருடை அணிந்து, பியூகிள், டிரம்பெட் வாத்தியங்களை இசைத்தபடி, ராணுவ வீரர்கள் போல வீதியில் நடப்பதைப் பார்க்கும்போது, பரவசமாக இருக்கும். ரயிலை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது என்பது போல, இந்த இசைக்குழுவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியோர் ஈர்ப்பு கொண்டது பேண்ட் வாத்தியம். அப்படிப்பட்ட இசைக்குழுவை, முழுக்க முழுக்க பெண்களே கையில் எடுத்தால்… கூடுதல் அழகுதானே! இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பேண்ட் வாத்தியக் குழுவினர் குமரி மாவட்டத்தில் சிறப்பாகும்.

பேண்ட் வாத்தியம் (மிலிடெரி கொட்டு)

கடம்
கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.

 

கொம்பு
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில் இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.

bottom of page