Do or Die!
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் உள்ள இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' என அழைக்கப்படும் இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் கருத்து.
கன்னியாகுமரி மாவடத்தின் (நாஞ்சில் நாடு) வளர்ச்சிக்கும், செல்வாக்கும் பெரிதும் பாடுபட்ட தலைவர்களையும் அவர்களின் வாழ்கை வரலாறுகளையும் பார்க்கலாம்
குமரி மாவட்டம் சாமிதோப்பபில் 1008 மாசி 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கு சரியான ( 4.3.1833 ) பிறந்தது முடிசூடும் பெருமாள் அன்பு சொரூபியாக வாழ்ந்து, 24வது வயதில் இறைவனின் நியம்படி, திருச்செந்தூர் கடலில் தீர்த்த மாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.....
கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் 1908 நவம்பர் 29 பிறந்தார், நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அவரது வாழ்க்கை தொடங்கியது 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி....