All power is within you; You can do anything and everything
பல மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள் இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம்,மந்திர், மந்திரா, தேவஸ்தானம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பாரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன.
இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
தைவிகம் : தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது.
ஆசுரம் : அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது.
ஆர்ஷம் : ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது.
மாநுஷம் : மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.
To visit Temple
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான நாகராஜாவுக்கென இங்குதான் தனியாக கோயில் உள்ளது..பசுமையான வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இத்திருக்கோயிலைச் சுற்றியும் ஏராளமான நாகப் பாம்புகள் தென்படுவதாக கூறும் உள்ளூர் மக்கள், ஆனால் அவைகள் கடித்து யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர்.
திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது