Kanyakumari District Food and Cuisine
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தெரிந்த நீங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பான உணவு மற்றும் சமையல் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
குமரி மாவட்ட உணவு பழக்கமானது தமிழகத்தின் பிற மாவட்டங்களை விடசற்று மாறுபட்டே காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உணவு பழக்கமானது கேரளத்து உணவு முறையை ஒத்தார்ப்போல் உள்ளதை பார்க்க முடியும். குமரி மாவட்டத்தில் காலையில் சிற்றுண்டி வகைகளும் மதியம் மற்றும் இரவில் மீன் குழம்புடன் கூடிய அரிசி உணவே பொதுவாக காண முடியும்..
இந்த உணவானது குமரி மாவட்டத்தில் காலை உணவாக பெரும்பாலான வீடுகளில ் பார்க்க முடியும். பச்சிரிசி ஊறவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் கள்ளு சேர்த்து புளிக்க வைத்து ஆப்பம்
சாப்பிடலாம் இதற ்கு கூட்டாக ஆக முட்டை கறி, மீன் கறி, சிக்கன் கறி, கடலை கறி, மற்றும் சட்னி போன்றவைகளை பயன் படுத்தலாம்.
இது மதிய சாப்பாட்டிற்கு சேர்க்கப்படும் கூட்டு வகையை சார்ந் தது ஆகும். குமரி மாவட்ட வீடுகளில் தினமும் இந்த அவியல் கூட்டு வகை கண்டிப்பாக இடம்பெறும். இதில் கத்திரிக்காய், வெள்ளிரிக்காய்,
நாட்டு மிளகாய், கேரட், பீன்ஸ், முருங்கை காய், புடலங்காய், சீனி அவரைக்காய், தேங்காய் துருவல் போன்ற அணைத்து காய்கறிகளும் சேர்ந்த இதன் சுவைக்கு நிகர் இல்லை.