top of page

காணும் இடங்களில் எல்லாம் மரங்கள், வற்றாத குளங்கள், ஊருக்கு ஒரு நூலகம், பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் என நாஞ்சில் நாட்டின் பெருமைகள் ஏராளம். நாஞ்சில் நாட்டின் தனித்தன்மைகள் ஆயிரம் என்றாலும் தவிர்க்க முடியாத அடையாளம் நாஞ்சில் நாட்டுத் திருமணங்கள்  இதனால் நாஞ்சில் நாட்டு கலாச்சாரத்தில் திருமணமானது முக்கிய பங்கு வகிக்கிறது  இதில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து கலாச்சார முறைகள் தமிழகத்தின் மற்ற மாவட்ட  திருமண முறை விட சற்று மருபட்டு இருப்பதை பார்க்க முடியும் அதை பற்றி  பார்க்கலாம் வாங்க .....

Related  Article

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Villu

Kanyakumari Distic Culture

Popular  Article

Kumari tamil
Onam Festival
Nanjil Nadu Hisrory
Vallakottai
Banana Chips
Marshal
Villu

நாஞ்சில் நாட்டுத் திருமணத்தின் அடிப்படைச் சடங்கு 'வெற்றிலைக் கைமாறுதல்’தான். அதாவது, நாஞ்சில் நாட்டில் இதை 'உரப்பித்தல்’னு சொல்வாங்க. இவர்தான் மாப்பிள்ளை, இதுதான் பொண்ணுனு பரஸ்பரம் பேசி ஒரு தட்டில் வெற்றிலை வைத்து மாத்திக்கிறதுதான் நோக்கம். ஆனால், இதை ஒரு மினி நிச்சயத் தாம்பூல வைபவமாகவே நடத்துவாங்க. அதைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சி நிச்சயதார்த்தம். அதோட விசேஷமே 'சாரத்து’ வாசிக்கிறதுதான். 'சாரத்து’னா, திருமணம் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கியத் தகவல் அறிக்கைனு அர்த்தம். திருமணம் நிச்சயம் செய்யும்போது கூட்டத்தினர் மத்தியில் பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர் ஒருத்தர் இதை வாசிப்பார்.

 

இதில் திருமண நாள், முகூர்த்த நேரம், மறு வீடு, மாப்பிள்ளை அழைப்பு நேரம்,  திருமணத்தோடு தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் இருக்கும். கூடவே நிச்சயதார்த்தம் முடிந்ததற்கு  அடையாளமாக ஒரு ஆலங்கம்பை வெட்டிக்கொண்டுவந்து சடங்குகளைச் செய்வாங்க. திருமணம் முடிஞ்சதும் மணமக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திலோ, அல்லது பொது இடத்திலோ இந்த ஆலங்கம்பை நட்டு வைத்துத் தண்ணீர்விட்டுப் பராமரிப்பாங்க. நாஞ்சில் நாட்டைச் சுற்றிப் பார்த்தா அதிகமாக ஆலமரங்கள் இருக்கும். அதுக்குக் காரணமே இந்தச் சடங்குதான்.

நாஞ்சில் நாட்டு ஹிந்து கலாச்சார முறை திருமணம்

நிச்சயதார்த்தம் முடிந்த கையோட இன்னொரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து 'தாலிக்குப் பொண்ணு உருக்குதல்’னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதாவது, மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் செய்றதுக்காக நகை ஆசாரியை அழைத்துவந்து நாஞ்சில் நாட்டுத் தாலி செய்வாங்க. தாலி செய்றதுக்குத் தேவைப்படுகிற தங்கத்தை மணமகனின் சகோதரிகள் கொடுக்கணும். சமீபகாலமா தங்கத்துக்குப் பதிலா பணமாகவே கொடுக்கிற கலாசாரம் வந்திடுச்சு. நடக்கிற எல்லா 

விசேஷத்திலுமே தடபுடல் விருந்தும் உண்டு

நாஞ்சில் நாட்டுக் கல்யாணத்தின் முக்கிய விசேஷங்களில் ஒன்று மணமகனின் தலையில் 'உருமா’ கட்டுவது. 

 மணமக்கள் சாப்பிடும்போது மணப்பெண்ணே, மணமகனுக்குப் பரிமாறுவாங்க. இதுக்கு 'சட்ரசம் பரிமாறுதல்’னு பேரு. திருமணம் முடிந்த அன்னைக்கு இரவு 'தீயல் சோறு’ போடுவாங்க. இது செரிமானத்துக்குக் கை கொடுக்கும். இப்படி இன்னும் பல சடங்குகள் இருக்கு. மொத்தத்தில் நாஞ்சில் நாட்டுக் கல்யாணங்கள்  பாசத்துக்கும் உறவுக்கும் மரியாதை கொடுப்பவை' என்றார்.

நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ கலாச்சார முறை திருமணம்

குமரி மாவட்ட  திருமண வீடுகளில் காணப்படும் தோரண வாயில்

அது என்ன 'உருமா’?   'உருமா’ என்பது ஒரு மா என்பதன் திரிபு. ஒரு மான்னா ஒன்றின் கீழ் இருபதுனு அர்த்தம். அதாவது, நிலத்தோட மதிப்பில் இருபதில் ஒரு பங்குன்னு சொல்ற மாதிரி 'நகையோட மதிப்பில் ஒரு பவுனில், இருபதில் ஒரு பங்குன்னு அர்த்தம். முன்னாடியெல்லாம் இந்தத் தங்கத்தைத் தலையில் கட்டுவாங்களாம். காலப்போக்கில் பட்டுத் துணியாகி, இப்போ துண்டுத் துணியாகிவிட்டது. தாலி கட்டி முடிந்ததும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மணமகனை ஆசீர்வாதம் செய்துவிட்டு மணமகனின் தலையில் ஒரு துணியைக் கட்டுவாங்க. அதாவது பல வண்ண நிறங்களில் அந்தத் துணி இருக்கும். மணமகன் சபையில் இருக்கத் தகுதியானவன்தான் என்றும் சுயமாக முடிவு எடுக்கும் வயதை அடைந்து விட்டான் என்றும் காட்டுறதுக்குத்தான் இந்த உருமா. இதே போல், சொந்த பந்தங்களுக்கும் மணமக்கள்  மேல் உள்ள உரிமையை நிலை நாட்ட 'உருமா’தான் ஆதாரம் 

 

அதே மாதிரி கல்யாணத்துக்கு முந்தைய நாள் ஊரில் உள்ள ஆண்கள் எல்லோருமே காய்கறி வெட்ட மண்டபத்துக்குப் போய்டுவாங்க. கல்யாணத்தன்று காலையில் டிபன், மதியம் 21 வகை பதார்த்தங்களோடு சாப்பாடு, மாலையில் நலுங்கு உருட்டு, தலையில் பப்படம் உடைக்கிறது வரைக்கும் பல விசேஷங்கள்  நடக்கும். முக்கியமா மதியம் 

bottom of page