
See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
தமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும் கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில் நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கிறது. திற்பரப்பு அருவியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ தொலைவில் உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து 85 கி .மீ தொலைவில் இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு
திற்பரப்பு அருவியில் உள்ள பூங்காவில் குழந்தைகளுக்கு விளையாட என்று பெரிய பொம்மைகளும் உண்டு . வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் உள்நாட்டு மக்களும் வந்து செல்கிறார்கள் .காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் அனுமதி உண்டு .பேருந்து வசதி ஒரு குறை .சொந்தமாக வாகனம் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் குற்றாலம் போல கூட்டம் நெரிசல் இருக்காது .நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று பாருங்கள்

For More Travel Info.. Condact Us Now
