See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மன் கால்வாய் என்பதைச் சுருக்கமாக ஏ.வி.எம். கால்வாய் (A.V.M Canal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது ஆகும்.
இது உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் (1846-1860) என்பவரால் தொடங்கப்பட்டது. மன்னர் 1860 ல் இறக்கவே, அவரது வாரிசு மன்னரான ஆயிலியம் திருநாள் ராமவர்மன் (1860-1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக பூவாறில் இருந்து தேங்காய்ப்பட்டணம், தாமிரபரணி நீர்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பெப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து.......