See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்’ ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ, நாகர்கோயில்லில் இருந்து 45 கி.மீ, தூரத்தில் உள்ள, எழில் நிறைந்த இந்த சுற்றுலா தலத்துக்கு மிக சுலபமாக சென்றடையலாம்.
கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி’ என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன. எப்படி காஷ்மீர் பகுதியானது ஒரு சொர்க்கபூமியென்று அழைக்கப்படுகிறதோ அதைப்போலவே இந்த கோவளம் கடற்கரையும் தெற்கிலுள்ள ஒரு ‘சொர்க்கபுரி’யாக புகழ்பெற்றுள்ளது.
கோவளம் நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சம் அதன் அழகிய கடற்கரைகளாகும். அலைகள் வீசும் கடலை ரசித்தபடியே இதமான மணற்பகுதியில் நடக்கும் அனுபவம் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய......