See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் குளிர்ந்த சுத்தமான மூலிகை கலந்த நீரும், மாசு கலக்காத காற்றும் சிறிய அருவிகள் என மனதை கொள்ளை கொள்ளும் பிரபலம் ஆகாத இடங்கள் ஏராளம் உள்ளன. அந்த வகையில் காளிகேசம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
நாகர்கோவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள காளிகேசம், நாகர்கோவில் பாலமோர் சாலையில் கேசவன்புதூர் வரை வயல்வெளிகளும் அதன் பின்னர் ரப்பர் மரங்கள், நறுமண பயிர்கள் என பசுமை மிக்க வனப்பகுதியாகும், ரம்மியான மலைமுகடுகள் உடலுக்கும் மனதிற்கும் சுகமளிக்கிறது. காளிகேசம் ஆற்றின் மேல் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு மேல் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
காட்டாறு என்றாலும் கூட தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆழமும் குறைவு என்பதால் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குளித்து செல்ல வசதியாக உள்ளது. தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. புதிதாக
காளிகேசம் ஆறுவரை.......