See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
கன்னியாகுமரி மாவட்டம் (நாஞ்சில் நாடு) தமிழ்நாட்டோடு இணைவதற்கு முன்பு வரை திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. எனவே இந்த மாவட்டத்தை சுற்றி ஏராளமான கோட்டைகளை காண முடிகிறது. நாகர்கோவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலைக்கு அருகில் அமைந்துள்ளது உதயகிரி கோட்டை. 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமானது.
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த காலம். திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்து கொண்டிருந்தார். மார்த்தாண்ட வர்மாவிற்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் பகை தலைதூக்கியிருந்த நேரம். குளச்சல் கோட்டை டச்சுக்காரர்களின் கீழ் இருந்தது. அங்கு ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தனர். போதிய இடமும், உணவும் இல்லாததால் தொற்று வியாதிகள் மூலம் பலர் இறந்தனர்.
இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு குளச்சலில் இருந்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மார்த்தாண்ட வர்மா திட்டமிட்டார். இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. டச்சு வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவால் கைது.......