See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
சிதறால் மலைக் கோவில் (Chitharal Jain Monuments) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும். நாகர்கோவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாடண்டு பழமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
சிதறால் மலை உச்சிக்கு செல்ல, கீழே இருந்து ஒரு கிலோ மீட்டர் நடைதான். ஆனால் புறவெளியை பார்த்தபடி ஏற ஏற மனவெளியில் ஏற்படும் மாற்றங்கள் அளவீடுகளின் பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவை. தொடுவானைத் தூக்கிப் பிடித்தபடி தூரத்தில் தெரியும் மலை முகடுகளில் கண் வைத்தால், விசாலத்தின் உணர்வு மனது முழுவதும்.......